Thursday, September 3, 2009

சிதறி சிறைப்பிடித்த இதயம்..


காதலுக்கு முன்:

சிரிக்காமல் சென்று
இதயத்தை சிதறடித்தாய்...

காதலுக்கு பின்:

சிரித்து சிரித்து
இதயத்தில் சிறைப்பிடித்தாய்..

--நிலாப்பெண்..

வாசகி தானே?


உனை வாசித்தப்பின்
முறையாய் நான்
வாசகி தானே?
எனை எப்படி
கவிஞர் ஆக்கினாய்?

--நிலாப்பெண்

நிலவாம் நிலவு...


வட்டப் பொட்டு
வச்சாத் தான்
உனக்கு பிடிக்கும்னு
நான் வச்சேன்..
இருட்டினதும்,
ஈனச்சிறுக்கி
வானமும்
வட்டப்பொட்டோட
நிற்கிறாளே

--நிலாப்பெண்..

எப்படி மறந்தேன்...


மனதின் கனம்,
இறக்கி வைக்க
தேடுகிறேன் யாரையாவது..
உயிர் தோழியோ
தொலை தூரத்தில்..
அலுவலக வலைக்குள்
வேண்டியவர்கள்..
செல்லிடைப்பேசிக்குள்
சிக்கியிருக்கும்
நூற்றுக்கும் மேற்பட்டோர்
எண்கள்...
திரும்ப திரும்ப
பார்க்கிறேன்.........
பெயர்களை மட்டும்..
யாரிடம் பகிர்வது?
யாருடைய நேரத்தையாவது
களவாடி என் துயர்
மறக்க வேண்டுமே!
பரந்த உலகில்
கோடிப்பேர்,
அவரவர் வாழ்கையை
தேடிக் கொண்டு..
செவி சாய்க்க
எவருமில்லை எனக்கு..
"திடீர் வெளிச்சம்"
அட! அருகிலேயே நீ..
எப்படி மறந்தேன்
என் இனத்தவளை?
அமைதியாய்,
முகம் சுளிக்காமல்,
என் கதைக்கேட்கும்
உன்னை..
என் தேவதை பொம்மையே!

--நிலாப்பெண்..

இனி சிறகெதற்கு?


சிறகுகள் இருந்தால்
பறந்து வந்து
பக்கத்திலேயே இருப்பேன்,
உன்னுடனேயே எப்போதும்........
சிறகுகளை உடைத்து விட்டு,
சுதந்திரமாக..

--நிலாப்பெண்..