தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 1/4 கிலோ.
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப, (நான் 5 ப.மிளகாய் போட்டேன்.)
பூண்டு -- 3 பல் ( ஜீரணத்திற்கு நல்லது) (போடலைன்னாலும் பரவாயில்லை)
உப்பு -- தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி ( தேக்கரண்டி -ன்னா Teaspoon)
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை
நான் எவ்வளவு அழகாய் குட்டி குட்டியாய் வெட்டியிருக்கேன்.. அதே போல பீன்சை நறுக்கவும்
1 அல்லது 1 வெங்காயம், காரத்திற்கு தகுந்தாற் போல் பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். வேண்டும் என்றால் 4 பல் பூண்டும் சேர்க்கலாம், ஜீரணத்திற்கு நல்லது.
==> கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உழுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.
==> சிறிது நேரம் வதக்கியவுடன், வெங்காயம் சேர்த்து, வதக்கவும்.
==> வெங்காயம் பொன்னிறமான பின், நறுக்கிய பீன்ஸை போட்டு வதக்கவும்
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணிர் ஊற்றி நன்றாக வதக்கவும். மிதமான தீயில் வைக்க வேண்டும். தண்ணீர் வற்றும் வரை அப்பப்போ வதக்கி விடவும். 5 - 10 நிமிடங்களில் பீன்ஸ் பொரியல் தயார்.
ஆரோக்கிய பலன்: பீன்ஸ் சாப்பிட்டால், நுரையீரலுக்கும் நல்லது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் நுரையீரல் தான் அதிகம் பாதிக்கப்படும், அவர்கள் தினம் பீன்ஸை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது.
--நிலாப்பெண்
© Copyrighted
2 comments:
நல்லது... குறிப்பிற்கு நன்றி...
avargal pugai pidipathai vittal athu beans sapiduvathai vida migavum nallathu
Post a Comment