கண்கள் கலங்கி
கண்ணீர் வழிய எத்தனிக்கும்
அத்தருணம்
வெறுமை!
காதல் சொல்லி
காத்திருக்கும்
அத்தருணம்
வெறுமை!
மோதல் செய்து
மெளனம் சுமக்கும்
அத்தருணம்
வெறுமை!
இருவர் கைக்கோர்த்து
நடக்கும் பாதையில் ஒத்தையாய்
போகும் அத்தருணம்
வெறுமை!
செல்லிடையில் சிணுங்கலுக்காய்
காத்திருக்கும்
அத்தருணம்
வெறுமை!
ஜன்னல் பறவைகள்
சொல்லாமல் கூட பறந்துப்போகும்
அத்தருணம்
வெறுமை!
கூந்தல் கோதிவிட
கைகள் தேடும்
அத்தருணம்
வெறுமை!
எதையோ சாதித்தப்பின்
அடுத்து என்னவென தவிக்கும்
அத்தருணம்
வெறுமை!
பசியோடு தூங்க முனைந்து
இருளின் கைப்பிடிக்கும்
அத்தருணம்
வெறுமை!
பழைய பரிசுகள் நிரம்பிய
இன்றைய பிறந்த தினத்தின்
அத்தருணம்
வெறுமை!
உறவுகள் ஊர்செல்லும்
ரயில் நிலைய பிரிவின்
அத்தருணம்
வெறுமை!
புன்னகை சொல்லி
பதில் இல்லா
அத்தருணம்
வெறுமை!
வாழ்க்கையின் சில வெறுமையான பக்கங்கள்
நிரப்பப்படுவதில்லை..
நிரப்ப மனமுமில்லை..
நிலாப்பெண்..