Monday, June 10, 2013

Why do we fall?

Sunday, June 9, 2013

3 MOVIES

I happened to watch 3 English movies this week, I thought I would share the experience with you all.
First movie's name is "The Vow" and it made me to say wow.. An amazingly wonderful love cum romantic movie. I enjoyed it to the core.

The other movie was "How to fall in love" which again gave me enlightenment on many things especially  about  love and trust. Compromise and Follow your heart were the 2 valuable advice I got through that movie.

Finally a recent movie named "Now you see me" It was surely a visual treat with so many things to think and recollect about. When we look much closer into something, then we are missing the bigger picture :) Nice message I got from this movie.

I am sure everybody would enjoy these movies.

Monday, May 27, 2013

சாபம்

உன் ராசாத்தி நானென நம்பி
கட்டிய கனவுக்கோட்டைகள் 
நொறுங்கும் நேரம்.
உன் முத்தம் அறிந்த
உதடுகளை பிதுக்கி
அழ மட்டுமே முடிந்தது.
சாபத்தை வரமாய் பெற்றப்பின்
ஆவித் துடித்தாலும்
கண்ணீர் வெடித்தாலும்
செத்த காதலுக்கு
எப்படி உயிர் வரும்?
பாவியாய் போனேன்
பரிதவித்து நின்றேன்.
என் இதயத்தின் கனம்
அதிகரித்துக் கொண்டே,
எறியமுடியாமல்
எரியவும் முடியாமல்!!!

--நிலாப்பெண்..

Monday, April 29, 2013

பூவும் வண்டும்


வண்டை பூ மொய்த்து பார்த்ததுண்டா,
என் கண்களை பார்..
உன் கண்களை பார்க்கும் வேளைகளில்...

--நிலாப்பெண்..

Sunday, February 3, 2013

நிலா

எங்கோ நீ
எங்கோ நான்
இரவில் மட்டும் சேர்கிறோம்
நம்மை பார்க்கும் நிலவினால்!

--நிலாப்பெண்..

Sunday, January 20, 2013

வெறுமை!



கண்கள் கலங்கி
கண்ணீர் வழிய எத்தனிக்கும்
அத்தருணம்
வெறுமை!

காதல் சொல்லி
காத்திருக்கும்
அத்தருணம்
வெறுமை!

மோதல் செய்து
மெளனம் சுமக்கும்
அத்தருணம்
வெறுமை!

இருவர் கைக்கோர்த்து
நடக்கும் பாதையில் ஒத்தையாய்
போகும் அத்தருணம்
வெறுமை!

செல்லிடையில் சிணுங்கலுக்காய்
காத்திருக்கும்
அத்தருணம்
வெறுமை!

ஜன்னல் பறவைகள்
சொல்லாமல் கூட பறந்துப்போகும்
அத்தருணம்
வெறுமை!

கூந்தல் கோதிவிட
கைகள் தேடும்
அத்தருணம்
வெறுமை!

எதையோ சாதித்தப்பின்
அடுத்து என்னவென தவிக்கும்
அத்தருணம்
வெறுமை!

பசியோடு தூங்க முனைந்து
இருளின் கைப்பிடிக்கும்
அத்தருணம்
வெறுமை!

பழைய பரிசுகள் நிரம்பிய
இன்றைய பிறந்த தினத்தின்
அத்தருணம்
வெறுமை!

உறவுகள் ஊர்செல்லும்
ரயில் நிலைய பிரிவின்
அத்தருணம்
வெறுமை!

புன்னகை சொல்லி
பதில் இல்லா
அத்தருணம்
வெறுமை!

வாழ்க்கையின் சில வெறுமையான பக்கங்கள்
நிரப்பப்படுவதில்லை..
நிரப்ப மனமுமில்லை..

நிலாப்பெண்..