வானமும் வட்டனும் அல்ல..
கருப்பும் வெள்ளையும் கட்டிக்கொண்டு,
ரஜினியும் ஸ்ரேயாவும் அல்ல..
மஞ்சளும் பச்சையும் பக்கத்திலேயே,
கட்சிக் கூட்டமும் அல்ல..
காவியும் சாம்பலும் பக்கத்திலேயே,
காஞ்சிபுர மடமும் அல்ல..
விதவை விற்கும் பாசிமணிகள்..
வெறும் பத்து ரூபாய்!
--நிலாப்பெண்..
==>வட்டன் -- சூரியனுக்கு நான் சூட்டிய செல்ல பெயர்..
2 comments:
i like the way u use my native(kanchi) :)
வட்டன் அருமையான செல்லப் பெயர்...இனி இவ்வண்ணமே சூரியனை இவ் உலகம் அழைக்கட்டும்...(நானே கடவுள்...பெரியாரும் நானே வள்ளலாரும் நானே...ஹஹஹஹ் :).)
Post a Comment