நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..
நீ பார்த்து புன்னகை செய்த நாள்..
உன்னோடு கைக்குலுக்கிய நாள்..
பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..
செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..
நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..
எனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்த நாள்..
மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..
உன் தோட்ட ரோஜாவை என் மேசையில் வைத்த நாள்..
என் வெட்கம் காண நீ கண்ணடித்த நாள்..
அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை சொன்ன நாள்..
எனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளித்த நாள்..
காதலை சொல்வதற்கு பதில் காபி சாப்பிடீங்களா என உளறிய நாள்..
தட்டுத்தடுமாறி கடைசியாய் காதலை சொன்ன நாள்..
நானும் காதலிக்கிறேன் என்றதும் பரபரப்பில் "நன்றி" சொன்ன நாள்..
இரண்டு நாட்கள் எனை காணமல் வீட்டிற்கே வந்த நாள்..
காய்ச்சல் குணமாக காவடி எடுத்த நாள்..
என் கண்ணில் தூசி விழுந்ததற்காக நீ கண் கலங்கிய நாள்..
எதிர்பாராமல் ஒரே நிற உடையில் சந்தித்த நாள்..
உன்னோடு கைக்கோர்த்து நடந்த நாள்..
இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்த நாள்..
முதன்முறையாய் உனை காண நான் காத்திருந்த நாள்..
செல்லமாய் என்னிடம் கோபித்து கொண்ட நாள்..
என் சமையல் என்பதற்காக உப்பில்லா உணவையும் உவகையோடு உண்ட நாள்..
இதமாய் உன் தோள் சாய்ந்து உறங்கிய நாள்..
தோல்வியின் போது உன் மடியில் முகம் புதைத்து அழுத நாள்..
வெற்றியின் போது உன் கரம் பிடித்து மகிழ்ந்த நாள்..
இத்தனை நாட்கள் கொண்டாட இருக்க..
நமக்கெதற்கு தனியாய் "காதலர் தினம்"
--நிலா பெண்..
No comments:
Post a Comment