வார்த்தைகளில் விஷம் தோய்த்து
தெறிக்கிறாய் உள்மனதில்..
நொந்து போன மனம் வெந்து
போய்க் கிடக்கிறது..
தெம்பிழந்து தெளிவிழந்து பிணமாகி
போகிறேன் நித்தமும்...
சக்தியில்லை, சாவும் வரவில்லை
சாபமாகி போன வாழ்க்கை..
கண்ணீர் தீர்ந்து ரத்தம்
வழிகிறது விழிகளிலிருந்து...
வலிகளையும் ரணங்களையுமே
வரமாக பெற்றேனோ?
நரகத்தில் கூட தண்டனைகள்
குறைவாக இருக்குமோ?
நிம்மதியை இழக்கவில்லை,எப்போதாவது
பெற்றிருந்தால் தானே இழப்பதற்கு..
இனியும் தாங்காது இதயம்,
இறப்பினையாவது இறைவா கொடு!
--நிலாப்பெண்..
No comments:
Post a Comment