Thursday, March 11, 2010

அமாவாசை அறியாச் சிறுமி..


அமாவாசை அறியாச் சிறுமி..
நிலவுத் தொலைந்துவிட்டதா?
எப்படி தொலைந்திருக்கும்?
நேற்றுக் கூட பார்த்தேனே?
நல்லாத் தானே இருந்தது?
யாருடனாவது சண்டையோ?
தனிக்கட்டை யாரோடு சண்டையிடும்?
நட்சத்திரங்கள் வம்பிழுத்திருக்குமோ?
நாலாப்பக்கத்திலும் இல்லையே?
கீழக் குதித்துத் தற்கொலை பண்ணியிருக்குமோ?
நாளிதழில் செய்தி வருமோ?
நிலவுக்கு என்னாச்சோ?
யாருமே கவலைப்படலையே?
அம்மா அடுப்படிக்குள்ளேயே?
அப்பா அலுவலகத்திலேயே?
நிலவு கண்ணாமூச்சி காட்டுதோ?
நாளைக்கு வந்திருமோ?
காத்திருக்கிறேன்..

--நிலாப்பெண்..

1 comment:

Tamilthotil said...

சிறுவர்,சிறுமிகளின் கற்பனை அலாதியானது.சின்ன வயதில் நானும் இதை நிறைய முறை யோசித்ததுண்டு.
உங்கள் பெயருக்கு ஏற்றாற் போல் ஒரு நல்ல கவிதை.அருமை