கருவறைக்குள் இருக்கும் மழலையின் தகிக்கும் தவிப்புக் குரல் இங்கே.. இல்லை இல்லை ஈழத்திலே...
இருட்டுக்குள் இருக்கிறேன்..
ஆனாலும் இதமாக இருக்கிறேன்..
வெளிச்சத்தை பார்க்கும் முன்னேவ
ெடிச்சத்தம் கேட்கிறதே!!
கருவறைக்குள்ளேயே கருகிப்போவேனா,
வெளியுலகிற்கு வந்து வெந்துப்போவேனா?
பூவாத் தலையா போட்டு பாருங்களேன்!!
அப்பா நேற்றே இறந்துப்போனாராம்,
மயங்கி கிடக்கும் என் தாயே,
நீ விழித்தவுடன் நம்மை அழித்துவிடுவர் தானே?
ஆதலால் விழித்துக் கொள்ளாதே அம்மா..
உன் ஈரவிழிகளையும்
நம் ஈழவலிகளையும் பார்க்கவா,
ஈரைந்த்து மாதங்களாய் உனக்குள் இருக்கிறேன்??
இறந்து போகலாம் வா தாயே,
இந்திய இறையாண்மையும்
அதைத்தானே விரும்புகிறது!!!
1 comment:
கண்ணீரை வரவழைக்கும் சக்தியுண்டு
கவலைகளுக்கு மட்டுமல்ல
கவிதைகளுக்கும் கூட....
கண்ணீரில் ஒரு கதறல் - இது
வெறும் கதறல் அல்ல
எம் தமிழினத்தின் சிதறல்...
அருமையானதொரு பதிவு
அழுகையானதொரு பதிவு
Post a Comment