ஈழத்தில்................
பிஞ்சு பாதங்களும்
பிறக்கா மழலைகளும்
சிதறுத் தேங்காய்களாய்!
பள்ளிக் குழந்தைகளும்
பருவ மங்கைகளும்
கிழிந்த ஆடைகளாய்!
வயது வந்தவரும்
முதிர்ந்த வயதினரும்
உடைந்த பொம்மைகளாய்!
இளம் காளைகளும்
எண்ணற்ற சகோதர்களும்
சாய்ந்த மரங்களாய்!
இதையெல்லாம் அறிந்தும்
ஐ.பி.எல் ஆட்டத்தையும்
நமிதாவின் நடனத்தையும்
நகராது பார்க்கும்
பிணங்களாய் நாம்!!!!!!
--நிலாப்பெண்..
1 comment:
அர்த்தமுள்ள வாழ்க்கை அவலம், தமிழை வளர்போமேன்று மண்ட மயிலாட பார்த்து வழிழும் தலையை கொண்ட நாடல்லவோ !.........
வெக்கி தலை கவிழ்கிறது என் சிரசு வேதனையில், இவரகளல்லோ மானுடத்தில் தமிழ் தாயை தரணியில் கூனி குறுக வைத்தவர்கள்
Post a Comment