இருட்டு தான் அதிகம் பிடிக்கிறது,
என் துக்கம் மறைக்க உதவும் தோழன்..
என் தூக்கமின்மையை விழித்திருந்து பார்க்கும் தோழன்...
என் கவலை ரேகைகளை கரம் கொண்டு காக்கும் தோழன்...
என் தனிமைக்கு துணைநின்ற தூய தோழன்..
ஏய் இருளே!
உனக்குள் நான் அடங்காதிருந்திருந்தால்,
மூச்சை நிறுத்தி அடங்கியிருப்பேன் மண்ணுக்குள்!
--நிலாப்பெண்..
1 comment:
really gud impressed with "இருள் தோழன்..."
Post a Comment