Monday, November 24, 2008

தொலைந்து விட்டேன்...

காதலித்து தொலைத்து விட்டேனே,
அட! கோபப்படாதே...
காதலித்தனால் தொலைந்து விட்டேன்...

--நிலா பெண்

வீழ்ந்துவிட்டேன்...

யாரும் தள்ளிவிடவில்லை,
தடுக்கி விடவும் இல்லை,
எப்படி வீழ்ந்தேன் என்று புரியவில்லை,
.
.
.
.
.
.
.
.
உன் கன்னக்குழியில்....

--நிலா பெண்..

அவலம்

கருவிலேயே சிதைத்திருந்தால்
மனித உரு மிருங்கங்களிடம்
சிக்கி சிதைந்திருக்க மாட்டேனே,
அனாதை...
நிலா பெண்..

காகித மலரும் அழகே..

ரோஜா, மல்லிகை 
இரு மலர்களும் பிடிக்குமெனிலும்,
நீ தலையில் சூடிவிட்டால்
காகித மலரும் பிடிக்கும்..

--நிலா பெண்

அறைகூவல்

உன் நுரை ஈரலின் அறைகூவலை,
போதை தெளிந்தும் உணரவில்லையே..

-நிலா பெண்..

Thursday, November 20, 2008

--நீ கிறுக்கிய மலர்கள்...--

அட!

நீ விளையாட்டாய்

என் உள்ளங்கையில் கிறுக்கிய

மலர்களிலும் மணம் வீசுதே!

--நிலா பெண் .

பறக்கிறேன்..

பறவை சிறகை விரித்தால் தான் பறக்கும்..
நீ இதழை விரித்தாலே நான் பறப்பேன்.. 

--நிலா பெண்..

தேவை தோழமை..

தோழமையும் தேவை தான்
உன்னிடம் சொல்ல முடியா என் காதலை,
அவர்களிடமாவது பகிரமுடிகிறதே..

--நிலா பெண்

திருநங்கைகள்

உறுப்புக்களில் கோளாறானாலும்
உள்ளத்தில் மனிதர் தானே!!!


--நிலாப்பெண்

அலை...

என்றோ ஒரு நாள் கடலலைகள் 
உன் பாதம் தொட்டிருக்க வேண்டும்..
மீண்டும் தொடவே ஓய்வின்றி கரை வருகிறது..

--நிலா பெண்

-விழி பேசுகிறதே..--

உன் இதழ்கள் பேசும் வார்த்தைகளை விட,

உன் விழிகள் பேசும் வார்த்தைகளே

சத்தமாக கேட்கிறது..

எனக்கு மட்டும்!

--நிலா பெண் ..

மழை...

மழை துளிகள் இம்மண்ணில் சிதறும் பொழுது...

மன குறைகள் விண்ணிற்கே செல்லுகிறது...

--நிலா பெண்

நிலா முகம்

தினமும் நிலவின் முகம் பார்த்து மகிழ்வதுண்டு,
நிலவை உன் கண்கள் சந்தித்திருக்க கூடும் என்று..

--நிலா பெண்

பார்வை போதும்...

கத்தியெல்லாம் தேவை இல்லை
உன் கடைக்கண் பார்வை போதும்
என்னை குத்தாமலேயே கொல்வதற்கு....

--நிலா பெண்..

--என் சுவாசமே...--

எல்லோரும் மூச்சுக்காற்றை சுவாசித்து வாழ்கின்றனர்;

நானோ உன் மூச்சுக்காற்றை மட்டும் சுவாசிக்க வாழ்கின்றேன்..

-நிலா பெண் ..

சிரிக்காதே...

தோண்டாமலே உருவான குழியில்,
வேண்டுமென்றே விழுந்தேன்..
சிரிக்காதே... பிறகு,
மீண்டும் மீண்டும் விழுவேன்
உன் கன்ன
கு
ழி
யி
ல்..

--நிலா பெண்

--அவசர கடிகாரம்..--

உன் கைகடிகாரத்திற்கு தான் எத்தனை அவசரம்,

ஏனோ நான் உன்னிடம் பேசும் போது மட்டும்

ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஓடுகிறது..
-
நிலா பெண்..

3ஆம் உலக போர்..

மூன்றாம் உலக போரை ஆதரிக்கிறேன்..
உன்னிடம் தஞ்சம் புகுவதற்காக..

--நிலா பெண்..

கொஞ்சும் தமிழ்..

உன்னை கொஞ்சியே தமிழ் வார்த்தைகள் தீர்ந்து விட்டனவே..

தமிழ்தனை விரிவாக்க அகத்தியனிடம் மனு கொடுக்கவோ..

--நிலா பெண்

சிரிக்காதே..

நீ சிந்திவிட்டு போன 
சிரிப்பில் தான் நான் 
சிதறி போனேன்,
என்பதை எப்போது உணர்வாய்..

--நிலா பெண்

இதயமே......................

எனக்கு அடிப்பட்டதற்காக,
நீ துடித்தாய் என
அறிந்ததில் இருந்து..
துடிக்க மறுக்கிறது
என் இதயம்...

--நிலா பெண்

எப்படி சொல்வதென்ன...........

ஒவ்வொரு முறையும் 
காதலைச் சொல்ல தான் 
நினைக்கிறேன்,
முடியவில்லை...
எப்படி சொல்வதென்ன 
ஒரே ஒரு முறை கூறிவிடேன்.. 

--நிலா பெண்

தனிமையும் இனிமை..

தனிமையை போன்ற கொடுமை இல்லை தான்,
தனிமையோடு உன் நினைவுகள் இருந்தால்,
வேறு இனிமையும் இல்லையடா...

--நிலா பெண்

மயங்கினேன்........

மயக்கம் தெளிவிக்க தண்ணீர் தெளித்தாய்,
மயக்கியவனே நீ என்பதை அறியாமல்...

--நிலா பெண்

பார்வை போதும்...

கத்தியெல்லாம் தேவை இல்லை
உன் கடைக்கண் பார்வை போதும்
என்னை குத்தாமலேயே கொல்வதற்கு....

--நிலா பெண்.

*நிலவே..*

வட்டமிட்ட முகத்தை கொண்டவளே !!
திட்டமிட்டு என் அகத்தை வென்றவளே !!
தொட்டுவிட்டால் கரைந்து விடுவாய் என்பதாலா..
முற்றத்திற்கு மேலே உள்ளாய்…
எட்டி நின்று பார்த்தாலும்
கட்டுக்கடங்கா சந்தோசத்தில்..
மெட்டு கட்டி பாட தோன்றுதே
நிலவே …என்.. வெண்ணிலவே..


---நிலா பெண்

ஆசைப்படுகிறேன்...

உன்னை பிரதிபலிக்கும் கண்ணாடியை இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே உடைந்து போவேன் என்று தெரியாமலேயே..

உனக்கு நிழல் கொடுக்கும் மரமாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே சாய்ந்து விடுவேன் என்று தெரியாமலேயே..

உனக்கு ஒளி தரும் விளக்காய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே அணைந்து விடுவேன் என்று தெரியாமலேயே..

உன் செவிக்கு இசையாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே ஊமையாகி நிற்பேன் என்று தெரியாமலேயே..

உன்னை கரை சேர்க்கும் படகாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே மூழ்கி விடுவேன் என்று தெரியாமலேயே..

உனது கனவுகளை நிஜமாக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே என் நினைவுகளையும் இழப்பேன் என்று தெரியாமலேயே..

உன் இதழ்ளில் புன்னகையாய் மாற ஆசைப்பட்டேன்,
உன்னாலே விழிகளிலே நீர் சுமப்பேன் என்று தெரியாமலேயே...

இன்னும் ஆசைப்படுகிறேன் உனை மட்டும்,
உன்னாலே எனதாசை நிராசை ஆகும் என்று தெரிந்துமே..

--நிலா பெண்

பெண் சிசு..

பெற்றவளும் பெண்,
உற்றவளும் பெண்,
பிள்ளை மட்டும் பெண்
என்றால்,
பிழையா?
பித்தர்களே!

--நிலா பெண்..

உயிரே..

மண்ணை விட்டு போக சொன்னாலும் போவேன்..
உன்னை விட்டு போக சொல்கிறாயே..
உன்னை நீங்காமலே வாழ்வதாயின்..
ஒரு நொடி கூட தூங்கமாலே,
உன்னை தாங்கி கொள்வேன்..
மரண பயத்தை கூட உயிர் தாங்குது..
உன் பிரிவை நினைத்தாலே
உயிர் நோகுது..
உன் இதழ் ஓர புன்னகையில் தான்
என் உயிர் நாடி உள்ளது..
நீ என்னை சாட்டையால் அடித்தாலும்
சிரித்து கொள்வேன்..
என் கனவு கோட்டையை இடித்து விடாதே..
தெரியும் எனக்கு..
ஒரு நாள்..
உன் மௌனம் கலையும்..
என் பாசம் உன்னிடம் பேசும்..
என் நேசம் உன்னை தழுவும்..
எது வரை என்கிறாயா?
என் சுவாசம் நிற்கும் வரை..
இல்லை இல்லை..
என் சுவாசம் நின்ற பின்னும்..

--நிலா பெண்

என் நினைவே

நான் மிகவும் கவனமாக தான் இருக்கிறேன்,
உன் நினைவை தவிர்த்து 
வேறு நினைவுகள் வரமாலிருக்க..

--நிலா பெண்

சிரி..

நீ வாய்விட்டு சிரித்தால் 
என் நோய் விட்டு போகும் அல்லவா...

--நிலா பெண்..

--அணியா அழகு..--

எனக்கு பிடிக்கும் என்று

நீ வாங்கி கொடுத்த கண்ணாடி வளையல்கள்,

உடைந்து விடுமோ என்று

அணியாமலே அழகு பார்க்கிறேன்..

--நிலா பெண் ..

மௌன விரதம்..

நீ என்னுடன் பேசாத நாட்களில் மட்டுமே 
மௌன விரதம் இருக்கிறேன்... 

--நிலா பெண்

என் நினைவே

நான் மிகவும் கவனமாக தான் இருக்கிறேன்,
உன் நினைவை தவிர்த்து 
வேறு நினைவுகள் வரமாலிருக்க..

--நிலா பெண்

அன்பே..

ஏன் என்னை சாகச்சொல்லாமல் 
உன்னை விட்டு போகச்சொன்னாய்..
ஓ!இரண்டும் ஒன்றென தெரிந்திருந்தா?

--நிலா பெண்..

என் கவிதை......

பத்து மாதம் சுமக்கவில்லை... 
பிரசவ வலியில் துடிக்கவில்லை...
காதல் மட்டுமே செய்தேன்...
பிறந்தது என் கவிதை குழந்தை...

--நிலா பெண்..

நீ இல்லாமலா?

உன் உள்ள அறையில் ஒரு இடம் கொடு,
இல்லையெனில் கல்லறையில் இட்டு விடு..
--நிலா பெண்..

காதல்

காதல் வாழ்க்கையின் ஒரு பகுதியாமே?
எனக்கு, வாழ்க்கையே காதலின் ஒரு பகுதி தான்...

---நிலா பெண்

எழுதுகோல்..

உன்னவனை பற்றி,
நான் எத்தனை கவிதை எழுதியுள்ளேன் தெரியுமா??
கேலி செய்கிறது எனது எழுதுகோல்்..

--நிலா பெண்..

விடியல்...

எப்படியாவது என் அறைக்குள் நுழையும் சூரிய ஒளிக்கு தெரிவதில்லை,
எனக்கு விடியல் நீ விழிக்கையில் தான் என்று!!!

--நிலா பெண்..

என் ஓவியமே..

ரவிவர்மாவின் ஓவியத்தை ரசித்தப்படி "நீ"
இல்லை.. இல்லை..
ரசித்தப்படி இன்னொரு "ஓவியம்"!!!

--நிலா பெண்..

தொழிலாளி இல்லையெனில்...

சாக்கடையை சுத்திகரிக்கும் 
தொழிலாளி இறந்ததால்,
மருத்துவரின் "கல்லா" நிறைந்தது..

--நிலா பெண்

யார் கவிதை...

நான் எழுதியதால் இது என் கவிதையா?
உன்னால் எழுதியதால் உன் கவிதையா?

--நிலா பெண

புரியவில்லை

சிரித்துக்கொண்டே 
உன் இல்லத்திற்குள் தானே போனாய்..
எப்போது
என் உள்ளத்திற்குள் நுழைந்தாய்??

--நிலா பெண்

துயரம்..

தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,

தூங்க கூட முடியா துக்கம்,

துவண்டு போன தேகம்,

தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,

தொலைந்துப் போன பாதையிலும்

துரத்தி வரும் துன்பங்கள்..

திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,

தவிடுப்பொடியான தருணங்கள்,

தீர்வுக்கூட வேண்டாம்,

திருப்பம் கூட இல்லையே..

துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு

தடுமாறும் வேளைகள்

துயரம் மட்டுமே துணையென

தூணில் சாயவும் தெம்பின்றி

துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி

தனிமையில் தவிக்கும் எந்நிலை

தயவுசெய்து வரவேண்டாம் யாருக்கும் தரணியிலே!!!

--நிலாப்பெண்..

பெண்மை காதல்..

பருவத்தின் வேகத்தை சந்தித்தேன் உன்னை சந்தித்ததும்...

பாவை என் மனதில் பாசத்தை கண்டேன் உன்னை கண்டதும்..

பிரிவின் வேதனையை உணர்ந்தேன் நீ விலகியதும்..

பீச் [beach] காற்றும் சில்லென்று சுட்டது நீ என்னை தொட்டதும்..

புன்னகையின் அர்த்தத்தை அனுபவித்தேன் உன் கனியிதழ் விரிந்ததும்..

பூவின் மனதை பார்த்தேன் நீ தலையசைத்து மகிழ்ந்ததும்... 

பெண் என் மனம் பொன்னாகுது உன்னை நினைத்ததும்..

பேதை என் பாதையை உணர்ந்தேன் உன்னை உணர்ந்ததும்...

பொழுதின் வண்ணத்தை விழித்திருந்து கண்டேன் உனை கனவாக...

போராடியது பெண்மையின் உள்ளம் உனை காணாததும்..

பெளர்ணமி நிலவாய் கரைந்தது நம் காதல் உனை இழந்ததும்..

--நிலாப்பெண்..

பார்த்ததால்

ஒவ்வொரு நாளும் உன்னை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தது,
எதிர்பாராமல் ஒரு நாள் பார்த்ததால் தான்...

--நிலா பெண்..

எதிர்பாராமல் உன்னை ஒரு நாள் பார்த்ததற்காகவா,
ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்க்கிறேன், "அதே நாளை"?

--நிலா பெண்.

எதிர்ப்பாராமல் ஒரு நாள் பார்த்து சென்றாயே...
எதிர்ப்பார்க்கிறேன் நீ மறுபடியும் பார்க்கும் நாளை..

--நிலா பெண்..

எதிர்பாராமல் உன்னை பார்த்த நாள் கூட,
என் முகம் பாராமல் ஏன் சென்றாய்...

--நிலா பெண்

என்னை தான் எதிர்பார்க்கிறாய் என்பதை
உன் விழி பார்வையே சொன்னதடா..

--நிலா பெண்..

எதிர்பார்த்தது எல்லாம் நடக்க வேண்டாம்...
என்னை எதிரில் பார்த்த பின்னாவது நின்றிருக்கலாமே..

--நிலா பெண்

எதிர்காலத்தில் நான் எதிர்பார்த்தது எல்லாம்,
உன்னை எதிரில் பார்த்த பின் நடக்கும் என்று நம்பினேன்..

--நிலா பெண்..

நீ எதிர்பாராமல் தான் என் வாழ்வில் நுழைந்தாய்...
ஆனால் எப்படி நான் எதிர்பார்த்தது போலவே இருக்கிறாய்?

--நிலா பெண்

நான் எதிர்பார்த்தபடியே வந்தாயே...
எதிரில் பார்த்தபின் ஏன் போனாய்...

--நிலா பெண்..

நான் எதிர்பார்த்தபடியே வந்தாயே...
எதிரில் பார்த்தபின் ஏன் போனாய்...

--நிலா பெண்..

உன்னை எதிரில் பார்க்க நாணப்பட்டு தானே,
ஓர பார்வையில் பார்க்கிறேன்...
அது புரியாதா உனக்கு?

--நிலா பெண்..

நான் எதிர்பார்க்கும் போதெல்லாம் வராமல்,
எப்படி எதிர்பார்க்காத போது எதிரே வருகிறாய்?

--நிலா பெண்..

சரி.. நமக்குள் ஒரு ஒப்பந்தம்..
நான் இனி உன்னை எதிர்பார்க்கவே மாட்டேன்..
என் அருகிலேயே இருந்துவிடேன் எப்பொழுதும் பார்க்குபடி..

--நிலா பெண

உன்னை கனவில் எதிர்பார்ப்பதால் தான்,
என் விழிபார்வையை துயில செய்கிறேன்..

--நிலா பெண்..

கள்வனே..
எதிர்பார்த்தேன்...
எப்படி கனவில் கூட என்னை காணாதவன் போலவே
தத்ரூபமாக நடிக்கிறாய்?

--நிலா பெண்.

உன்னை எதிரே பார்த்த நாளில்..
எதிர்காலத்தையும் உன் வடிவில் பார்த்தேன்..

--நிலா பெண்..

பொன் நகையை விட
உன் புன்னகையை தானே நான் அதிகம் எதிர்பார்ப்பது..

--நிலா பெண்..

நான் எதிர்பார்க்கவே இல்லை..
நீ என்னை எதிர்பார்பாய் என்று..

--நிலா பெண்




நினைவு...

உன் நினைவுகளை 
என் இதய அறையில் பூட்டிவிட்டு...
வேண்டுமென்றே தான் தொலைத்தேன்
அதன் சாவியை...

--நிலா பெண்

சந்தேகம்...

நான் பலமுறை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டவள், 
குறுக்கு கேள்விகள் நெஞ்சை துளைக்க ...
நேர்மை திறமிருந்தும் நெஞ்சில் உரமின்றி ...
இதயம் இழந்து எண்ணம் இழந்து சரிந்து விழுந்தவள்..
எனக்கு சிறிது ஓய்வு கொடு 
நீ உன் கேள்விக் கனைகளை கூர் தீட்டு 
நான் என் நெஞ்சுக்கு வலுவூட்டுகிறேன்.. 
ஆனால் என் அன்பு குறையவில்லை.. 
சந்தேகிக்காதே என்னை..
மீண்டும் சந்திக்க சக்தி இல்லை..
இன்னொரு கூண்டில்.. 

--நிலாப்பெண்..

நீ வேண்டும்..

தங்க மணிகள் தேவையில்லை
உன் கண்மணியில் இடம் வேண்டும்...
தோப்பு துரவுகள் தேவையில்லை
உன் தோளில் சாய துணிவு வேண்டும்..
காசு பணம் தேவையில்லை
உன் காலடியில் வாழ வரம் வேண்டும்..
உலக வாழ்வே தேவையில்லை
என் காதலை ஏற்க நீ வேண்டும்..

--நிலா பெண்..

இருள் தோழன்...

இருட்டு தான் அதிகம் பிடிக்கிறது,
என் துக்கம் மறைக்க உதவும் தோழன்..
என் தூக்கமின்மையை விழித்திருந்து பார்க்கும் தோழன்...
என் கவலை ரேகைகளை கரம் கொண்டு காக்கும் தோழன்...
என் தனிமைக்கு துணைநின்ற தூய தோழன்..
ஏய் இருளே! 
உனக்குள் நான் அடங்காதிருந்திருந்தால்,
மூச்சை நிறுத்தி அடங்கியிருப்பேன் மண்ணுக்குள்!

--நிலாப்பெண்..

ஒவ்வொரு நொடியும்........

ஒவ்வொரு நொடியும் உன்னை நினைக்கிறேனே..
ஒரு நொடியாவது நீ என்னை நினைப்பாயா?

--நிலா பெண்

நினைவே..

"மறந்தும் உன்னை நினைக்க மாட்டேன்"

என்று சொன்ன நீயா?

"என்னையே மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்"

என சொல்கிறாய்??

--நிலாப்பெண்...

மழை...

அழைக்கும் போதெல்லாம் வரமால்
அறுவடை நேரத்தில் வந்தாயே.. 
உழவனின் கண்ணீர் மழையை உளவு பார்க்கவோ??
--நிலா பெண்

ஆசைப்படுவதில்லை...

நான் ஆசைப்படுவதை விட்டுவிட்டேன்,
புத்தர் போதனைக்காக அல்ல..
காதலால் புத்தி பேதலித்ததிலிருந்து....

--நிலாப்பெண்

Tuesday, November 18, 2008

முள்...

குத்தினாலும் வலிக்காத முள்
உன் மீசை மட்டுமே... 

--நிலாப்பெண்..

வலி தான் வாழ்வோ?????

வார்த்தைகளில் விஷம் தோய்த்து
தெறிக்கிறாய் உள்மனதில்..

நொந்து போன மனம் வெந்து
போய்க் கிடக்கிறது..

தெம்பிழந்து தெளிவிழந்து பிணமாகி
போகிறேன் நித்தமும்...

சக்தியில்லை, சாவும் வரவில்லை
சாபமாகி போன வாழ்க்கை..

கண்ணீர் தீர்ந்து ரத்தம் 
வழிகிறது விழிகளிலிருந்து...

வலிகளையும் ரணங்களையுமே
வரமாக பெற்றேனோ?

நரகத்தில் கூட தண்டனைகள்
குறைவாக இருக்குமோ?

நிம்மதியை இழக்கவில்லை,எப்போதாவது
பெற்றிருந்தால் தானே இழப்பதற்கு..

இனியும் தாங்காது இதயம்,
இறப்பினையாவது இறைவா கொடு!

--நிலாப்பெண்.. 

உன்னிடம் மட்டும்

தோற்று போக 
யாருக்கு தான் பிடிக்கும்?
எனக்கு பிடிக்கும்,
உன்னிடம் மட்டும்...

--நிலா பெண்

எதற்கு காதலர் தினம்...

நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..

நீ பார்த்து புன்னகை செய்த நாள்..

உன்னோடு கைக்குலுக்கிய நாள்..

பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..

செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..

நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..

எனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்த நாள்..

மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..

உன் தோட்ட ரோஜாவை என் மேசையில் வைத்த நாள்..

என் வெட்கம் காண நீ கண்ணடித்த நாள்..

அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை சொன்ன நாள்..

எனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளித்த நாள்..

காதலை சொல்வதற்கு பதில் காபி சாப்பிடீங்களா என உளறிய நாள்..

தட்டுத்தடுமாறி கடைசியாய் காதலை சொன்ன நாள்..

நானும் காதலிக்கிறேன் என்றதும் பரபரப்பில் "நன்றி" சொன்ன நாள்..

இரண்டு நாட்கள் எனை காணமல் வீட்டிற்கே வந்த நாள்..

காய்ச்சல் குணமாக காவடி எடுத்த நாள்..

என் கண்ணில் தூசி விழுந்ததற்காக நீ கண் கலங்கிய நாள்..

எதிர்பாராமல் ஒரே நிற உடையில் சந்தித்த நாள்..

உன்னோடு கைக்கோர்த்து நடந்த நாள்..

இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்த நாள்..

முதன்முறையாய் உனை காண நான் காத்திருந்த நாள்..

செல்லமாய் என்னிடம் கோபித்து கொண்ட நாள்..

என் சமையல் என்பதற்காக உப்பில்லா உணவையும் உவகையோடு உண்ட நாள்..

இதமாய் உன் தோள் சாய்ந்து உறங்கிய நாள்..

தோல்வியின் போது உன் மடியில் முகம் புதைத்து அழுத நாள்..

வெற்றியின் போது உன் கரம் பிடித்து மகிழ்ந்த நாள்..

இத்தனை நாட்கள் கொண்டாட இருக்க..

நமக்கெதற்கு தனியாய் "காதலர் தினம்"

--நிலா பெண்.. 

மின்னல்..

கற்றை மழையில்,
மின்னல் வெட்டு..
வானவெளியில் அல்ல,
உன் பார்வை ஒளியால்..

--நிலாப்பெண்...

மது வேண்டாம்

அருகில் இருக்கும் மதுக்கடைக்கு
அடிக்கடி போகும் தந்தையால்,
தொலைதூரம் இருக்கும் மருந்துக்கடைக்கு
தினந்தோறும் பயணிக்கிறாள் தாய்..
அப்பா அவளை அடித்தற்காக மருந்து வாங்க அல்ல,
தந்தைக்கு மது பரிசளித்த புற்றுநோய்க்காக..

--நிலா பெண் 

மீசைக்காரா...

உன் மீசையை அடிக்கடி முறுக்கி விடாதே..
அதை பார்த்து நொறுங்குவது என் மனம்..

--நிலாப்பெண்.. 

விழிமீன்..

இரவில் உன் விழிமீன்களை திறந்து விடாதே..
விண்மீன்கள் எல்லாம் ஒளிந்து கொள்ளும்..

நிலாப்பெண்..